image40

WELCOME TO NEWSWAY TAMIL

Check out my channel

நீங்கள் காண வேண்டிய முக்கிய Videos

image41

காவலரின் கையை துண்டித்துவிட்டு சென்ற கும்பல்.

ஊரடங்கை மீறி   பயணித்த கும்பலை போலீசார் தடுத்து நிறுத்தியபோது  போலீஸ்காரரின் கையை துண்டித்துவிட்டு ,  சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

 பஞ்சாப் மாநிலத்தில்ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.


இந்த  உத்தரவை  முன்னிட்டு  பாட்டியாலாவில் சாலை போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே  இங்கு இயங்க முடியும். 


இந்த நிலையில்    பாட்டியாவில் காலை நேரத்தில் வாகனம் ஒன்றில் சீக்கியர்களின் பாரம்பரிய உடையில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு வாகனத்தில் வந்த நான்கு-பேரரை   காலை 6.15 மணியளவில்  காய்கறி சந்தை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த   செக்போஸ்டில் போலீசார் தடுத்து நிறுத்தி ஊரடங்கு நேரத்தில் வாகனத்தை இயக்குவதற்கான அனுமதி கடிதத்தை  காட்டும்படி கேட்டுள்ளனர்.


 அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த தகராறின்போது  அவர்களை தடுக்க முயன்ற  ஒரு போலீஸ் எஸ்.ஐ யின் கையை வாளால் வெட்டி துண்டாக்கிவிட்டு  தடுக்க முயன்ற இரண்டு போலீஸ் அதிகாரிகளையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.


 கைகள் துண்டிக்கப்பட்ட எஸ்.ஐ., பாட்டியலாவில் உள்ள ராஜீந்திர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு  அவருக்கு  முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர்  சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ.எம்.ஆர்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


இந்தசம்பவம் குறித்த தகவலை பாட்டியலா மாவட்ட சீனியர் போலீஸ் சுப்பிரண்டு மண்தீப் சிங் சித்து உறுதிபடுத்தியுள்ளார்.


போலீசாரின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி  சென்ற  நிஹாங்க்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக எஸ்.எஸ்.பி. சித்து கூறியுள்ளார். 


image42

பெண் காவலரை தாக்கி ...

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ஆஷா (33), திருமங்கலம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். 

நேற்று மாலை வழக்கம்போல்  தனது இருசக்கர வாகனத்தில் சாதாரண உடையில் பணிக்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.


அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் ஆஷா சென்று கொண்டிருந்த  வாகனத்தின் மீது மோதிவிட்டு  ஆஷாவின் அணிந்திருந்த ஏழரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர். 


தற்போது ஆஷா அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்தநிலையில் பெண் காவலரிடம் தங்க செயினை பறித்து சென்றுள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கண்விழிக்கும் முன்னரே...

தற்போது  நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை   கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது.


கொரோனா வைரஸ் எதிர்ப்பு போரில் மக்கள் வீடுகளுக்குள் உள்ள  நிலையில், வீடுகளுக்கு  வெளியே   சுகாதாரத்துறை , வருவாய்துறை, உள்ளாட்சி துறை, காவல்துறை, தீ அணைப்புதுறை,  என முக்கிய துறையினர் இந்தப்போரில்  முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றனர்.


   இந்த நிலையி்ல் நோய்தொற்றுக்களின் ஊற்றுக்கண்களை   காலி  செய்யும் களப்பணியாளர்களாக இருந்துவரும்  உள்ளாட்சிதுறையின்  அடிநிலை பணியாளர்களான  துப்புறவு பணியாளர்களும் கொரோனா தடுப்புபணியில்  தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சூரியன் கண்விழிக்கும் முன்னரே தாங்கள் எழுந்து  , அவன் வீடு  சென்றபின்னரே தங்களது வீடுகளுக்கு திரும்பிச்செல்கின்றனர்.


 தற்போதுதான் இவர்களது  பணியின்  தேவை குறித்த தெளிவு   மக்களுக்கு தெரிய துவங்கியுள்ளது. 

 மருத்துவர்களை  கடவுளுக்கு அடுத்த இடத்தில் மனதில் வைத்த மக்கள்  மூன்றாவதாக தூய்மை பணியாளர்களையும் தங்களது மனதில் வைக்கதுவங்கியுள்ளனர். 


மரணத்தை விதைக்க காத்திருக்கும் பல்வேறு  இனந்தெரியாத பாக்டீரியா மற்றும்  வைரஸ்சுகளுக்கு மத்தியில் இவர்கள்   சரியாக செயல்பட்டால் மருத்துவர்களின் பணிச்சுமையில் பாதி காலியாகவே இருக்கும் என்பது இன்றைய சூழலில் மக்களுக்கு தெரியவந்துள்ளது.


  அதனால்தானோ என்னவோ தற்போது தூய்மை பணியாளர்களுக்கு நாடு முழுவதும் மக்கள் தங்களது ஆதரவுக்கரங்களை நீட்டி வருகின்றனர். 


அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களாக செயல்பட்டுவரும் 53 பணியாளர்களுக்கு தி.மு.க வின் மாநில நெசவாளர் அணி செயலாளரும் , ஈரோடு எஸ்.எல்.டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனருமான எஸ்.எல்.டி ப சச்சிதானந்தம் தனது சொந்த பணத்தில் ரூ அறுபதாயிரம் மதிப்பில் அரிசி, துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், முட்டைகள், முககவசம், சோப்புகள்,உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார்.


இதற்கான  நிகழ்ச்சியில் சிவகிரி பேரூர் தி.மு.க செயலாளர் கோபால் , மாவட்டஇலக்கிய அணி செயலாளர் இளஞ்செழியன், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அரசு,  கொடுமுடி ஒன்றிய தி.மு.க  துணை செயலாளர்  பாபுராஜா, ஆட்டோ ஓட்டுநர் சங்கநிர்வாகி சேகர்,ரமேஷ், கெளரிசங்கர்,  கிருஷ்ணா பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கொரோனாவுக்கு குட்பை..

உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல்  தடுப்பதற்காக   தற்போது   ஊரடங்கு  உத்தரவு அமலில் உள்ளது.


 இந்த உத்தரவு மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைக்காக காலை நேரத்தில்   தளர்த்தப்படுகிறது.


  காலை நேரத்தில்  தளர்த்தப்படும் இந்த உத்தரவை பயன்படுத்தி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து  அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை  வாங்கி செல்கின்றனர்.


அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி புதிய பஸ்நிலையத்தில்   செயல்பட்டுவரும் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் கொரோனா தொற்றுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் எவ்வித அச்சமுமின்றி குழந்தைகளுடன் கும்பல் கும்பலாக மார்கெட்டிற்கு வந்துகொண்டிருந்தனர்.


இதன் விபரீதத்தை புரிந்துகொண்ட பெருந்துறை  கோட்டத்துக்குட்பட்ட  சிவகிரி காவல்துறையினர் மக்களிடம் மார்க்கெட்டிற்கு கூட்டமாக வரவேண்டாம்.. பாதுகாப்பு  வழிமுறைகளை கடைபிடியுங்கள் என்று  வலியுறுத்தி வந்தனர்.


இதனை மதிக்காத  பலர்  எந்தவித பொறுப்புணர்வுமின்றி வழக்கம்போல் மார்க்கெட்டிற்கு வரத்தொடங்கினர்.


சிவகிரி  தினசரிமார்கெட்டில் நாள்தோறும் நடந்துவரும் இந்த அவலம் குறித்த செய்தியை நமது நியூஸ்வே தமிழ்சேனலில் சுட்டிக்காட்டி  காணொளி  வெளியிட்டியிருந்தோம்.


இது குறித்து அறிந்த ஈரோடுமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் அறிவுறுத்தலின்பேரில் காவல்துறை  அதிரடியாக களம் இறங்கியது.


இதனை அடுத்து  பெருந்துறை  டி.எஸ்.பி ராஜ்குமார் தலைமையில் சிவகிரிக்கு காவலர் படையினர் வந்தனர்.


முன்னதாக  மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியம்  அங்கு வந்திருந்தார்.


எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியம் மற்றும் டி.எஸ்.பி ராஜ்குமார் ஆகியோர் சிவகிரி காய்கறி மார்க்கெட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 


பின்னர் பேரூராட்சி துப்புறவு பணியாளர்களைக் கொண்டு மார்கெட் செயல்பட்டுவந்த இடம் தூய்மை படுத்தப்பட்டதுடன் , அங்கு   செய்யவேண்டிய வைரஸ் தடுப்புக்கான  பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து  ஆலோசனை நடத்தினர்.


இது குறித்து கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியம் தேவையில்லாத நபர்கள் மார்கெட்டிற்கு வருவதை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.


இதன்முதல் படியாக மார்க்கெட்டில் அதிக கடைகள் இருப்பது குறைக்கப்படும். நாள்தோறும் முப்பது கடைகள் மட்டுமே இங்கு செயல்படும். இந்த கடைகளும் சுழற்ச்சி அடைப்படையில் செயல்படும். மக்கள் ரேஷன் கார்டு அடிப்படையில் மார்க்கெட்டிற்குள் அனுமதிக்கப்படுவர். 


 ஒரு முறை வந்தவர் மூன்று நாட்களுக்கு  பின்னர்தான்  மார்கெட்டிற்கு வரவேண்டும். என்றார்.


இதனை அடுத்து காவல்துறை சார்பில் டி.எஸ்.பி  ராஜ்குமார் கூறியதாவது ‘‘இந்த மார்க்கெட்டில் வெளியூர் வியாபாரிகள் அதிகம் வருவது கண்காணிக்கப்படும் . 


அதிகப்படியான கடைகள் இருப்பது குறைக்கப்பட்டுள்ளது.

மார்கெட்டிற்கு வரும் மக்கள் குழந்தைகளை கூட்டிவரக்கூடாது. வியாபாரிகள் கையுறைகள் 

அணிந்திருக்கவேண்டும், அடிக்கடி அவர்களது கைகளை கழுவவேண்டும்.


  அத்துடன் ஈரோட்டை போல இங்கும் தொகுதி எம்.எல்.ஏ.வின் ஒத்துழைப்புடன் டிஸ்இன்ஸ்பெக்சன் டணல்  எனும்  நோய்தொற்றா  சுரங்க பாதைஅமைக்கபடும்.


மக்கள் அந்த சுரங்க பாதை வழியாக வரும்போது வைரஸ் தொற்றுக்கள் அழியும்.


 மார்கெட்டிற்கு வரும் மக்களுக்கு  கொரோனா விழிப்புணர்வுக்காக  சுகாதாரத்துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை  பலப்படுத்துகிறோம். 


மேலும் சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மைக்குகள் வைத்து  வாகனங்களில்  சென்று கொரோனா விழிப்புணர்வை அதிகப்படுத்த உள்ளோம். என்றார் அவர்.


image43

எல்.ஐ.சி, ஸ்டார் ஹெல்த், யுனைடட் இந்தியா ஆகிய காப்பீட்டு நிறுவனங்களின் ஆயுள் , மருத்துவம், மற்றும் வாகனங்களின் காப்பீட்டு சேவைகளுக்கு அழைக்கவும் 909 22 99 267

மி்ன்னஞ்சல்  bhairavimassmedia@gmail.com 

image44

அம்புகள் இங்கே... எய்தவன் எங்கே?

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கொரோனா நிவாரணத்துக்கு அனுப்பபட்ட அரிசியை கடத்துவதற்கு உடந்தையாக இருந்த  ரேஷன் கடை ஊழியர் மற்றும் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வேனை ஓட்டி சென்ற  டிரைவர் என இருவரை கைது செய்த போலீசார் அவர்களை  சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

நேற்று முன்தினம் சிவகிரி சின்னியகவுண்டன் பாளையத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையிலிருந்து அரிசி மூட்டைகள் தனியார் ஒருவரின் வேனில் ஏற்றப்படுவதை அறிந்த பொதுமக்களில் ஒருவர் இது குறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அதன்பேரில் அங்கு சென்ற சிவகிரி போலீசார் அந்த கடையின் விற்பனையாளரிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். போலீசாரின் கேள்விக்கு ... வேனில் ஏற்றப்பட்ட அந்த மூட்டைகள் அருகில் உள்ள மற்றொரு கடைக்கு கொண்டு செல்லப்படுவதாக   விற்பனையாளர்  பதில் அளித்துள்ளார்.

இதனைகேட்ட போலீசார் திரும்பி சென்றுள்ளனர். இருந்தபோதும் போலீசாருக்கு தகவல் தந்த  நபர் அரிசிமூட்டைகளை எடுத்துசென்ற அந்த வேனை பின்தொடர்ந்துள்ளார். 

சற்று தொலைவு வரை சென்ற  அந்தவேன் அருகில் உள்ள கடைக்கு செல்லாமல் வேறு வழியில் சென்றுள்ளது. 

இதனைக்கண்டு  வேனை பின்தொடர்ந்த  நபர் இது குறித்து மீண்டும் சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலை கேட்ட போலீசார்  திரும்பவும்  வந்து அந்த வேனை துரத்திப்பிடித்தபோது அந்த வேனில் 200 கிலோ  அரிசியை கடத்திக்கொண்டு செல்வது தெரியவந்தது. 

இதனால்  வேனை பறிமுதல் செய்த  போலீசார் வேனின் ஓட்டுநர்  சிவகிரியை  சேர்ந்த அருண்(24) என்பவரையும், வேலாயுதம்(43) என்பவரையும் கைது செய்து ஈரோடு உணவுகடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்பேரில்  இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்கள் இருவரையும் சிறைக்கு அனுப்பியுள்ளனர். 

இதற்கு பின்னர்  தற்போது வரை  இந்த அரிசியை கடத்திக்கொண்டு செல்வதற்கு காரணமானவர் மற்றும் வேனின் உரிமையாளர்  ஆகியோர்  மீது வழக்கு பதியப்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவலை   உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிடாமல் உள்ளனர்.


image45

கொரோனாவுக்கு எதிரான போர்..கொடுமுடியில் விறு..விறுப்பு.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மணிக்கூண்டு,கடைவீதி,புதுபஸ்டேண்ட்,பழைய பஸ்நிலையம்,சார்நிலைக்கருவூலம், சார்பதிவாளர் அலுவலகம் , ரயில்வே ஸ்டேஷன்,உள்ளிட்ட இடங்களில் கொரோனா வைரஸ்,குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுமுடி வட்டார வணிகர் நல சங்கத்தினர் விநியோகித்தனர்.


இதில் கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், வணிகர்சங்க தலைவர் பத்ரிநாராயணன்,செயலாளர் குணசேகர்,ஆலோசகர் ராஜாசுப்பிரமணி, மற்றும் செயற்குழு,உறுப்பினர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


கொடுமுடியில் அரசு நிர்வாகங்களை  முந்திக்கொண்டு வணிகர் சங்கத்தினர் வைரஸ் தடுப்பு பரப்பரையில் ஈடுபட்டது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

image46

கொடுமுடியில் ஒளவையார் சிலையா?

தமிழ் திரையுலக  வரலாற்றில் கடந்த 1935ம் ஆண்டு தொடங்கி 1969 வரை 13 படங்களில் மட்டும் நடித்து தனக்கான தனி இடத்தை பிடித்தவர் கொடுமுடியை சேர்ந்த கே.பி. சுந்தராம்பாள். இவரது நடிப்பில்

 நந்தனார் -1935

 மணிமேகலை- 1940. ஔவையார் -1953

. பூம்புகார் -1964

 திருவிளையாடல் -1965

 மகாகவி காளிதாஸ் -1966

 கந்தன் கருணை -1967

 உயிர்மேல் ஆசை- 1967 (வெளிவராத படம்).துணைவன் -1969

சக்தி லீலை - 1972. ஞாயிறு திங்கள் - 1972

 காரைக்கால் அம்மையார் 1973

 திருமலை தெய்வம் 1973 என்ற 13 படங்கள்  உருவாகின. 


இவற்றில் உயிர்மேல் ஆசை என்ற படத்தை தவிர பிற 12 படங்கள் மட்டுமே  திரைக்கு வந்துள்ளன.

மத்திய அரசின் பத்மஸ்ரீ  விருதை பெற்றுள்ள கே.பி சுந்தராம்பாள்  ஆரம்ப காலங்களில் கிட்டப்பாவுடன் சேர்ந்து நாடக உலகில் கோலோச்சினார். 


இன்றுவரை இவரது குரலைக்கேட்பவர்கள்  சங்ககாலத்து தமிழ் பெண்புலவரான  ஒளவையாரை நினைவுக்கு கொண்டுவரும் வண்ணம் தனது நடிப்பு மற்றும் பாட்டு திறமையால் புகழ்பெற்றவர் இவர்.


கடந்த 1958ல் காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழக சட்சபைக்கான மேலவை உறுப்பினராக இருந்துள்ளார். 

சுதந்திரத்துக்கு முன்னர் 

வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம் ஆகியவை குறித்த பாடல்களை மேடைகளில் பாடி வந்தார்.


ஒரு முறை மகாத்மா காந்தி கொடுமுடிக்கு வந்தபோது  வெள்ளையனே வெளியேறு இயக்க பணிக்காக தன்னிடமிருந்த  விலை உயர்ந்த பொருள்களில் ஒன்றினை மகாத்மா காந்தியிடம் தானமாக அளித்தார்.


 காங்கிரஸ் கட்சியின் மீது ஈடுபாடு கொண்டிருந்த  சுந்தராம்பாள் மீது தமிழக முன்னாள் முதல்வர்களான மறைந்த கருணாநிதி, எம்.ஜி. ராமசந்திரன், ஜெயலலிதா ஆகியோர் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர்.

 

இதன் காரணமாக  ஈரோடு மாவட்டம் கொடுமுடியில்சுந்தராம்பாள்   கட்டிய திரையரங்கை  கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் , ஜெயலலிதா ஆகிய மூன்றுபேரும் ஒரே வாகனத்தில் ஒன்றாக  வந்திருந்து  திறந்து வைத்தனர்.


சுந்தராம்பாளின்  திரையுலக சாதனையை பாராட்டும் விதமாக அப்போதைய மத்திய அரசு ,  அவருக்கு  பத்மஶ்ரீ  விருதை வழங்கியது.  


கடந்த 1980- செப்டம்பர் 19-ம் தேதி,   72 வயதில் இயற்கை எய்திய  கே.பி சுந்தராம்பாளுக்கு அவரது பிறந்த ஊரான கொடுமுடியில்  நினைவுச்சிலை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ஊரைச்சேர்ந்தவர்கள்  வைத்து வந்தனர்.


இந்த கோரிக்கை  குறித்த ஆலோசனைக்கூட்டம் கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது.

 இதில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ, சிவசுப்பிரமணியம், தமிழக நாடக நாட்டுப்புற கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தானை சத்தியராஜ், கே.பி சுந்தராம்பாள் தமிழிசை பேரவை நிர்வாகிகள்  அன்னை பாலன், துரை சக்தி கணேஷ், காங்கிரஸ் வட்டார கமிட்டி தலைவர் கோபாலகிருஷ்ணன், மற்றும் இஸ்லாமிய, கிறிஸ்தவ  சமூகத்தை சேர்ந்த  முக்கியஸ்தர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கே.பி சுந்தராம்பாள் குடும்பத்தை சேர்ந்த  உறுப்பினர்கள் அசோகன், கணபதி, ஜெகதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தரிசன நேரம்

இறைவனின் சந்நிதியில் ...இளையராஜா..

image47

ரஜினி வீட்டு முன்பு தர்ணா...

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த  திருநங்கைகள் எட்டுபேர்  சென்னை போயஸ்  கார்டனில் உள்ள நடிகா் ரஜினிகாந்த்  வீட்டின் முன்பு அமா்ந்து  ரஜினி தங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என தா்ணா போராட்டம் நடத்தினர்.


இதனால் ரஜினி வீட்டில் இருந்த அவரது  குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். 


இதனால்  ரஜினியின் மனைவி லதா, தனது வீட்டுக்காவலாளி வழியாக  ரூ.5 ஆயிரம்  பணத்தை திருநங்கைகளிடம் வழங்கி  தர்ணாவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.


ரஜினி வீட்டு முன்பு நடந்த இந்த திடீர் தர்ணாவினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


விறுவிறுப்பு செய்திகள்

image48

எட்டு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு..

எட்டு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு..

எட்டு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு..

 தமிழகத்தில்  8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இதில் இரண்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நான்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அடங்குவர்.

இவர்கள் தவிர செவிலியர்கள் ஐந்துபேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதி படுத்தியுள்ளார்.

image49

சர்க்கார் கைது...சர்க்கார் நடவடிக்கை...

எட்டு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு..

எட்டு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு..

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக, டில்லி ஜாமியா பல்கலை., மாணவர்கள், கடந்த ஆண்டு போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் பிப்ரவரி மாதம், சிஏஏ எதிர்ப்பாளர்கள் - சிஏஏ ஆதாரவாளர்களுக்கிடையேயான மோதலாக மாறியது,

 

நான்கு நாட்கள் நீடித்த  இந்த மோதலின்போது பொதுச் சொத்துக்கள், தனியார் வணிக நிறுவனங்கள் தீக்கிரையாகின. 

உளவு பிரிவு போலீசார் இரண்டு பேர் உள்ளிட்ட  54 பேர்  உயிரிழந்தனர்.

 

கடந்த வாரம்  வன்முறை சதியில் ஈடுபட்டதாக ஜாமியா பல்கலை.,யின் ஆய்வுப் பிரிவு மாணவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில், ஜாப்ராபாத் பகுதியில் பெண்களை திரட்டி, சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்ததாக கூறி , ஜாமியா பல்கலை., மாணவி சபூரா சர்க்காரை போலீசார் கைது செய்துள்ளனர்.


image50

14க்கும் 17 க்கும் தடை...

எட்டு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு..

14க்கும் 17 க்கும் தடை...

ஏப்ரல்   14 ம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாளும், 17 ம் தேதி தீரன் சின்னமலையின் பிறந்த நாளும் வருகிறது.


ஆண்டுதோறும் கோலகலமாக கொண்டாடப்படும் இவர்களின் பிறந்தநாள் விழாவை   இந்த  ஆண்டு கொண்டாட முடியாத வகையில் கொரோனா  வைரஸ்சின் தாக்கம்   ஊரடங்கு உத்தரவை கொண்டுவந்துள்ளது.


வழக்கமாக இவர்களின் பிறந்த நாளன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி, தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாடுவதுதான் சிறப்பு.

ஆனால் இந்த முறை கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், பொதுமக்கள் யாரும் அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலையின் பிறந்த நாளன்று, அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.


 மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலையின் பிறந்த நாளன்று அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வேண்டாம் எனவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மரியாதை செலுத்துவர்கள் எனவும்  அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடந்தவை...நடப்பவை

மோடியிடம் முறையீடு :18 மாவட்டங்களை கடந்து வந்த ஒட்டகப்பால்:

மோடியிடம் முறையீடு :18 மாவட்டங்களை கடந்து வந்த ஒட்டகப்பால்:

மோடியிடம் முறையீடு :18 மாவட்டங்களை கடந்து வந்த ஒட்டகப்பால்:

image51

மும்பையை சேர்ந்த  ரேணுகுமாரியின் மூன்றரை வயது குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

அலர்ச்சியின் காரணமாக தொடர்ந்து ஒட்டகப்பால் மட்டும் புகட்டுப்பட்டு வந்த இந்தகுழந்தைக்கு ஊரடங்கு உத்தரவின் காரணமாக  ஒட்டகப்பால் கிடைக்கவில்லை.


 இந்த நிலை குறித்து  குறிப்பிட்டு   பிரதமர் மோடியின் டிவிட்டரில்  டேக் செய்துள்ளார் ரேணுகுமாரி.

இதனை அறிந்த   முதல் தர ஒட்டகப்பாலை தயாரித்துவரும் அத்விக் என்ற நிறுவனம் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தது.


ஆனால் அந்த பாலை மும்பகை்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதியில்லாமல் போனது. இதனை அறிந்த மூத்த ஐ,பி .எஸ் அதிகாரி போத்ரா அதற்கான முயற்ச்சியை  எடுத்தார். 


அவரது முயற்சியின் காரணமாக ராஜஸ்தானிலிருந்து 30 லிட்டர் ஒட்டகப்பாலை ரயில்வே துறை மும்பை கொண்டு வந்து அந்த பெண்ணிடம் சேர்த்தது.


இதுகுறித்து வடமேற்கு ரயில்வே போக்குவரத்து மேலாளர் தருண் ஜெயின்  கூறுகையில் , ' ஐபிஎஸ் அதிகாரி போத்ரா மூலம் இந்த விவகாரம் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. 


உடனடியாக நான் அஜ்மீரில் உள்ள மண்டல ரயில்வே மேலாளர் மகேஷ் சந்த் ஜீவாலியாவைத் தொடர்ப்பு கொண்டு பேசினேன்.

இதையடுத்து, பஞ்சாப் லூதியானாவிலிருந்து மும்பை பாந்த்ராவுக்கு செல்லும் சரக்கு ரயில் 00902 என்ற ரயிலை ராஜஸ்தானின் பால்னா ரயில்நிலையத்தில் நிறுத்த திட்டமிட்டோம். 


அந்த ரயில்நிலையத்துக்கு 20 லிட்டர் ஒட்டகப்பாலை கொண்டுவரச் செய்து பேக்கிங் செய்து மும்பைக்கு அனுப்பி வைத்தோம். இதற்காக பால்னா ரயில்நிலையத்தில்  சிறப்பு அனுமதி பெற்று ரயிலை நிறுத்தினோம்.


வர்த்தகம் செய்ய இது உகந்த நேரம் அல்ல, மனித நேயம்தான் முக்கியம். 18 மாவட்டங்களைக் கடந்து ரயில்வே ஒரு குழந்தைக்கு உதவியுள்ளது' எனத் தெரிவித்தார்.


கண்முன் இறந்த தந்தை: காணமுடியாத மகன்

மோடியிடம் முறையீடு :18 மாவட்டங்களை கடந்து வந்த ஒட்டகப்பால்:

மோடியிடம் முறையீடு :18 மாவட்டங்களை கடந்து வந்த ஒட்டகப்பால்:

image52

டெல்லி மாநாட்டுக்கு  சென்ற தந்தையும் மகனும் டெல்லியில் தங்கி சிகிச்சை பெற்றபோது  தந்தை இறந்தார்  அவரை காணமுடியாத  நிலைக்குள்ளாகினர் மகன்.


தமிழ்நாட்டின் விருதாச்சலத்தி்ல் உள்ள தாஷ்கண்ட் நகரைச் சேர்ந்த தந்தையும் மகனும் டெல்லியில் நடந்த தப்லீக் எ ஜமாத்தின்  மர்கஸீக்கு சென்றுள்ளனர்.


ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்ட நிலையில் அங்கு தங்கியிருந்தவர்களை  நிஜாமுதீனினின் மர்க்கஸ் காலி செய்தபோது   சென்ற மார்ச் 31 ல் டெல்லியில் உள்ள   தீன்தயாள் மருத்துவமனையில்   பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


அந்த வகையில் விருத்தாச்சலத்திலிரு்து சென்ற இவர்கள் இருவரிடம்  பரிசோதனை நடத்தப்பட்டு அங்கிருந்த லோக்நாயக் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 மறுநாள் தந்தையின் உடல்நிலை மோசமாகி இறந்துள்ளார்.


இது குறித்த தகவலை அறிந்தும் அவரது மகனால் அவரது தந்தையை காணமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.


இறந்தவரின்  குடும்பத்திற்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை   அறிந்த அவரது குடும்பத்தினர் அவரது உடலை அங்கேயே அடக்கம் செய்துவிடும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக  பதில் தெரிவித்ததால் அவரது உடல் டெல்லியிலேயே அவர்களது மத வழக்கப்படி அடக்கம் செய்யும்பணியை டெல்லிமாநில அரசு மேற்கொண்டது. இறந்தவரிடம் முன்பு நடத்திய மருத்துவ பரிசோதனையில் இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளில்  அவருக்கு நோய்தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.


இவருடன் சேர்த்து டெல்லி மாநாட்டிற்கு சென்று இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாவதாக அதிகரித்துள்ளது.


வேளாங்கண்ணி முதல் ஒட்டன்சத்திரம் வரை ...

மோடியிடம் முறையீடு :18 மாவட்டங்களை கடந்து வந்த ஒட்டகப்பால்:

வேளாங்கண்ணி முதல் ஒட்டன்சத்திரம் வரை ...

image53

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர்  பிழைப்பிற்காக வேளாங்கண்ணிக்கு செங்கல் சூளை தொழிலுக்கு சென்றனர்.


அங்கு  வேலை இல்லாததால் மீண்டும் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்கு வருவதற்கு முடிவு செய்தபோது அவர்களிடம் போதுமான தொகையும் போக்குவரத்து வசதியும் இல்லாமல் போனதால் அவர்கள் ஆறுபேரும்  கடந்த ஒன்பது நாட்களாக வேளாங்கண்ணியிலிருந்து ஒட்டன் சத்திரத்துக்கு நடந்தே வந்துகொண்டிருந்தனர்.


ஒன்பதாவது நாளில்  திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை மஞ்சம்பட்டியில் செயல்பட்டுவரும்  தற்காலிக காய்கறி மார்க்கெட் அருகே நடந்து வந்துகொண்டிருந்தபோது அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.


அப்போது அவர்கள் ஆறுபேரும் பசியுடன் இருப்பதும் அவர்களுடன் வந்த ஒரு சிறுமி கடந்த இரண்டு நாட்களாக உணவின்றி போனதால் மிகுந்த களைப்பிலும் பசி மயக்கத்திலும் இருப்பதை அறிந்த போலீசார் அவர்களுக்கு   உணவளித்தனர். பின்னர் தங்களிடம் இருந்த பணத்தையும் தந்தனர்.


பின்னர் அந்த வழியாக வந்த லாரியில்  ஒன்றில் அவர்களை ஏற்றி  அவர்களது சொந்த ஊரில் இறக்கிவிட்டு விட்டு மணப்பாறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு லாரி ஓட்டுநரிடம் கேட்டுக்கொண்டனர்.


போலீசாரின் இந்த உதவிக்கு அந்த குடும்பத்தினர் நன்றி  தெரிவித்துள்ளனர்.


சரக்கு மூன்று நாட்களுக்கு மட்டும்

சரக்கு மூன்று நாட்களுக்கு மட்டும்

வேளாங்கண்ணி முதல் ஒட்டன்சத்திரம் வரை ...

image54

இந்தியா முழுவதும் மூன்று நாட்களுக்கு சிறப்பு பார்சல்களுக்கான சரக்கு ரயில்கள்  இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.


ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை  இயக்கப்படும்  இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 


ஒரு லட்சம் போலீசாருக்கு உணவுப்படி

சரக்கு மூன்று நாட்களுக்கு மட்டும்

ஒரு லட்சம் போலீசாருக்கு உணவுப்படி

image55

 கொரோனா பரவலை தடுக்கும்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும்  சுமார் ஒரு லட்சம் போலீசாருக்கு உணவுப்படி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ஒரு லட்சம் காவலர்களுக்கு  மாதத்துக்கு ரூ.8,250 உணவுப்படி வழங்கப்படுகிறது. 


காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை இந்தப்படி அனைவருக்கும் வழங்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து   அதிகாரிகள் தரப்பில் கூறும்போது 'காவலர்களுக்கு 6 நாட்களுக்கு மட்டுமே உணவுப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில்   கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  வருவதை முன்னிட்டு   இந்த  ரூ.8,250 வழங்கப்படுகிறது' என கூறியுள்ளனர்.


Our Partners

image56
image57
image58
image59
image60

செய்தி துளிகள்

அயல்நாட்டு பிரஜைகளுக்கு ஐநூறு முறை...

22 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு

22 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு

image61

இந்தியாவின் ரிஷிகேசில் உள்ள  தபோவனம் பகுதியில் பல்வேறு  நாடுகளைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்   தங்கியுள்ளனர்.


இவர்களில்  பத்து பேர்  ஊரடங்கு உத்தரவை மீறி  சுற்றிதிரிந்துள்ளனர்.


இவர்களைப் பிடித்த  அந்த பகுதியை சேர்ந்த  போலீஸ் எஸ் ஐ  விநோத் குமார் ஷர்மா தனித்தனியாக 'நான்  ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்கவில்லை, எனவே நான் மன்னிப்புக் கேட்கிறேன்' என்று  500 முறை அவர்களை   எழுத வைத்துள்ளார்.


22 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு

22 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு

22 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு

image62

உலகம் முழுவதும் 22 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 


சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதத்தில்  கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்  இன்று வரை 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. 


இதில்  17 லட்சத்து 76 ஆயிரத்து 936 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இவர்களில்  12 லட்சத்து 66 ஆயிரத்து 189 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

 இதுவரை 4 லட்சத்து 2 ஆயிரத்து 10 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். 


ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 737 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ்தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை அதன் பிடியிலிருந்து மீட்கும்  பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது பாதிக்கப்பட்டுவருகின்றனர்.


 அந்த வகையில், உலகம் முழுவதும் 22 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.


ஏப்ரல் 8நிலவரப்படி உலகம் முழுவதும் 22 ஆயிரத்து 73 மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 


பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தே மருத்துவத்துறை ஊழியர்களுக்கு கொரொனா தொற்று ஏற்படுவதாகவும் ,  தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் வைரஸ் பரவுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.கவசம் அணியவில்லை என்றால்...

22 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு

கவசம் அணியவில்லை என்றால்...

image63

வீடுகளில் இருந்து வெளியே வரும்  மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து இலங்கை காவல்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்  வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள்  குறுக்குவீதிகள் , மற்றும் முக்கிய சாலைகளுக்கு வரும்போது தங்களது முகத்தில் முக கவசம் அணிந்திருக்கவேண்டும். 


இல்லையென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாசத்துக்கு பக்கத்துல...

கொரோனா சிகிச்சைக்குசென்றவர்மீது கொலை வழக்கு பதிவு.

கவசம் அணியவில்லை என்றால்...

image64

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மகாராஜபுரம் மணல்மேட்டு ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். கூலி வேலை செய்துவருகிறார். 


இவருடைய இரண்டாவது மனைவி மஞ்சுளா, வயதான தம்பதிகளுக்கு, மன வளர்ச்சி குன்றிய நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும்  மகன் ஒருவர் உள்ளார்.


 அறிவழகனின் மனைவி மஞ்சுளாவுக்கு புற்றுநோய் உள்ளது. இதற்காக கடந்த ஆறு மாதமாக புதுச்சேரியில் உள்ள  ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.


  இதற்காக  மாதம் ஒரு முறை அறிவழகனும் மஞ்சுளாவும் ஹீமோதெரபி சிகிச்சைக்காக  ஜிப்மர் மருத்துவமனைக்கு   சென்று வந்துள்ளனர்.


 இந்த சிகிச்சைக்காக  கடந்த மார்ச் 31-ம் தேதி,  சிகிச்சைக்கு வர சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில்  கொரோனா பரவலை தடுக்கவேண்டி ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தபட்டது.


 இதனால் சிகிச்சைக்கு எப்படிசெல்வது? என்ற கவலை அறிவழகனுக்கு ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு, மஞ்சுளாவிற்கு புற்றுநோய் பாதிப்பினால் வந்த வலி அதிகமாகி துடித்துக்கொண்டிருந்துள்ளார்.


 மனவளர்ச்சி குன்றிய மகனையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மனைவியையும் எண்ணி கலங்கிபோன போன அறிவழகன்   தனது மனைவி மஞ்சுளாவை  எப்படியாவது சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என முடிவெடுத்து 

தனது மகனை அருகில் இருந்தவர்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, கடந்த 29-ம் தேதி, சாப்பாடும் தயார்செய்து எடுத்துக்கொண்டு, அதிகாலை 5 மணிக்கு தன்னுடைய சைக்கிளில் மனைவியை உட்கார வைத்து ஓட்டிக்கொண்டே புதுச்சேரிக்குக் கிளம்பிவிட்டார். 


அணைக்கரை, வடலுார், கடலுார் வழியாக 130 கிலோமீட்டர் துாரம் கடந்து புதுச்சேரி மருத்துமனைக்கு இரவு 11 மணியளவில்  இவர்கள் இருவரும் சென்று சேர்ந்துள்ளனர். 


அப்போது ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில், தனது மனைவி மஞ்சுளாவின் நிலையையும், ஊரிலிருந்து சைக்கிளில் வந்தபோது ஏற்பட்ட கஷ்டத்தையும்  அங்கிருந்த மருத்துவர்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். 


அதைக் கேட்ட மருத்துவர்கள் உடனே சிகிச்சையைத் தொடங்கியதுடன், அறிவழகனுக்கும் அவர் மனைவிக்கும் வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்துள்ளனர்.


 மேலும், இரண்டு நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை அவர்களது  சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த மருத்துவர்களிடம் , `இந்த உதவியை என் உசுரு உள்ளவரை மறக்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார் அறிவழகன்.

 இதுகுறித்து அறிவழகன் கூறும்போது  `` என் குடும்பம்தான்  எனக்கான உலகம். என்னுடைய முதல் மனைவி சுசிலா, பல ஆண்டுகளுக்கு முன்னர் நெஞ்சுவலியால் இறந்து விட்டார். 


மூத்த மகன் ரவி, சென்னையில் வேலைபார்த்து வருகிறான். முதல் மனைவி இறந்த பிறகு மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டேன். இளைய மகன் மனவளர்ச்சி குன்றியவன். குறைந்த வருமானம் வந்தாலும் வாழ்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது, கடவுள் எனக்கு காசைக் கொடுக்கவில்லை; கஷ்டத்தை மட்டும் தொடர்ச்சியாகக் கொடுத்துவந்தார். 


ஆறு மாதத்திற்கு முன், மஞ்சுளாவிற்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டது. கன்னத்தில் தாங்க முடியாத வலி வந்து துடித்துபோக, எல்லோரும் ஜிப்மர் மருத்துவமனைக்கு போய் காட்டச் சொன்னார்கள்.


 அங்கு சென்று பரிசோதனை செய்ததில், கன்னத்தில் புற்றுநோய் கட்டி இருப்பதாக டாக்டர்கள்  சொன்னார்கள்.


மனதைத் தேற்றிக்கொண்டு, இருக்கிறவரை அவளை கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளத் தொடங்கியதுடன், மாதம் ஒரு முறை சிகிச்சைக்காக அழைத்துச்சென்று வந்தேன். இந்த மாதத்திற்கான சிகிச்சைக்குச் செல்லவேண்டிய நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. `எப்படி போகப்போறோம். நம்மகிட்ட பணம் இல்லை. நாம்ம சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க' என எண்ணி, சைக்கிளிலேயே செல்ல முடிவெடுத்தேன்.


அதனை மஞ்சுளாவிடம் சொன்னபோது , `ஏங்க அவ்வளவு தூரம் சைக்கிளிலேயா போவது?' என என்னை கஷ்டப்படுத்தக் கூடாது என வலியைப் பொறுத்துக் கொண்டு சொன்னார்,


அதற்கு  `வலியைவிட தூரம் ஒண்ணும் பெருசு இல்லை' என அவளிடம் கூறினேன். எனக்கு அவளும் அவளுக்கு நானும் உலகம் என்பதால், மறு பேச்சு பேசாமல் கிளம்பினாள். வழியில் இரண்டு இடங்களில் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட்டோம். 


கன்னத்தில் வலியிருந்தாலும் ஒரு இடத்தில்கூட அதை அவள் முகத்தில் காட்டவில்லை.


ஒரு இடத்தில் போலீஸார் தடுத்து, 'எங்க போறீங்க' எனக் கேட்க, நான் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனதுடன், பாசத்துக்கு பக்கத்துல எதுவும் நிற்க முடியாது என தட்டிக்கொடுத்து டீயெல்லாம் வாங்கிக் கொடுத்து, `ஜாக்கிரதையா போய்ட்டு வாய்யா' என தட்டிக்கொடுத்து அனுப்பினர்.


பிரமிப்படைந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்ததுடன், ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பிவைத்தனர். அவர்களிடம், `என் மனைவியைக் காப்பாத்தி கொடுங்கய்யா. அவளுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல' என  கேட்டேன். 


`உன் மனைவி மேல, நீ வச்சிருக்கிற அன்பு அவங்களைக் காப்பாத்தும். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மறக்காமல் வர வேண்டும்' என்றனர். அவளை காப்பதுதான் என் வேலை. எப்படி மறப்பேன்? நிச்சயம் அவளைக் காப்பாற்றுவேன்'' என்றார் அறிவழகன்.


கொரோனா சிகிச்சைக்குசென்றவர்மீது கொலை வழக்கு பதிவு.

கொரோனா சிகிச்சைக்குசென்றவர்மீது கொலை வழக்கு பதிவு.

கொரோனா சிகிச்சைக்குசென்றவர்மீது கொலை வழக்கு பதிவு.

image65

கொரோனா சிகிச்சைக்கு சென்ற நோயாளி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இவர்களில் திருச்சி மாவட்டத்தினர் 39 பேரும், பிற மாவட்டத்தினர் 3 பேரும் அடங்குவர்.


இவர்களுக்கு  தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதில் கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து, மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியுள்ளார்.  முகக் கவசத்தை அகற்றி எறிந்துள்ளார்.


இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த நபர் மீது  திருச்சி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


ஆப்பு வைக்கும் ஆப்....ஜீம் அதிர்ச்சி தகவல்.

கொரோனா சிகிச்சைக்குசென்றவர்மீது கொலை வழக்கு பதிவு.

கொரோனா சிகிச்சைக்குசென்றவர்மீது கொலை வழக்கு பதிவு.

image66

ஐ.டி துறையில் பணியாற்றும் பலரையும் அவர்களது வீட்டிலிருந்தே பணியாற்றும்   நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது கொரோனா வைரஸ். 


 வீட்டிலிருந்தே  பணியாற்றும்  பலரும் மற்றவர்களுடன் காணொளி காட்சி முறையில்  தொடர்புகொண்டு உரையாற்றுவதற்காக உபயோகிக்கும்  மென்பொருள்தான் ஜீம் Zoom.

காணொளிகாட்சி முறையில் மற்றவர்களுடன்  உரையாற்றுவதற்காக பலரும்  பயன்படுத்தி வரும் இந்த மென்பொருள்  தற்போது  அதிக அளவில் உலகம் முழுவதும்  உபயோகத்தில்  உள்ளது.


இப்படி  பலரும் உபயோகித்துவரும் இந்த மென்பொருளில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.


இந்த  மென்பொருளை  தங்களது நிறுவனத்தை சேர்ந்த  பணியாளர்கள் எவரும்   பயன்படுத்தக்கூடாது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

 இது குறித்து  கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள ஈ மெயிலில் ஜீம்  Zoom மென்பொருளில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதால், கூகுள் பணியாளர்களின் லேப்டாப்களில் இந்த மென்பொருள் இருந்தால் அதன் சேவை இந்த வாரத்தோடு நிறுத்தப்படும் என அறிவித்திருந்தது.


 மதர்போர்ட் நிறுவனம் கடந்த வாரம்  நடத்திய ஆய்வில், ஐபோன் மற்றும் ஐபாட்களுக்கான ஜீம் Zoom செயலியிலிருந்து குறிப்பிட்ட சில தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் செயலியின் மூலம் பயனர்களின் மைக்ரோஃபோன்கள் மற்றும் வெப்கேம்களை ஹேக்கர்கள் கட்டுப்படுத்தி ஆப்பிள் ஐமாக்கினை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.


Subscribe